Navaratna Projects

ரோட்டரி  மாவட்டம் 3000 - அகில இந்திய ரோட்டரியின்  நட்சத்திர  சிறப்பு திட்டம்

Special projects for nine months on second saturday of every month except July 2017, January 2018 & June 2018.

Give Blood Save Lives - July
Completed

"சிகப்பு" -(இரத்த தான முகாம்) (Give Blood Save Lives)

Date : சனிக்கிழமை (Saturday), 1st July 2017

தகமைசால்  அனைத்து ரோட்டரி சங்க தலைவர்களுக்கும்  எங்களது  வணக்கங்கள்  மற்றும்  வாழ்த்துக்கள்.

இந்த நட்சத்திர சிறப்பு திட்டம் அகில இந்திய ரோட்டரி தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, மேற்கூறிய தினத்தில் நடத்த அனைத்து மாவட்ட ஆளுநுர்களாலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஏற்பாடு செய்யும் பொறுப்பு சிறப்பு திட்ட குழுவினரான எங்களிடம், மாவட்ட ஆளுநர் Rtn. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் ஒப்படைத்து  உள்ளார்கள் .

​இத்திட்டத்தினை வழிமொழிந்து மிக சிறப்பாக நடத்தி ரோட்டரியின் பெருமையை நமது அனைத்து மக்களும் அறிய செய்திட அனைத்து சங்க தலைவர்களையும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இத்திட்டத்தினை ஒரு நகரில் உள்ள ஒரு சங்கமோ அல்லது எல்லா சங்கங்கள் இணைந்துமோ, அங்குள்ள அரசாங்க மருத்துவமனை இரத்தவங்கியின்  உதவி பெற்று அல்லது அரசில் பதிவு செய்யப்பட்ட தனியார் இரத்த வங்கிகளின் உதவி கொண்டோ நடத்தலாம்.

நாம் கீழ்கண்டவற்றினை செய்தல் நலம் பயக்கும்.

 1. திட்ட செலவினை  மதிப்பிட்டு  பட்ஜெட்  தயாரித்து கொள்ளுதல்
 2. முகாமிற்கு தேவையான இடம்
 3. அனைவருக்கும் முகாமினை விளம்பரபடுத்தி, இரத்த தானம் அளித்திட ஊக்கப்படுத்துதல்
 4. நமக்கு உதவி செய்யும் இரத்த வங்கியினை கண்டறிதல் / நம்மோடு இணைத்து கொள்ளுதல்
 5. நமது ரோட்ராக்ட் மற்றும் இன்டராக்ட் சங்களை இந்த திட்டத்திற்கு உபயோகித்துக்கொள்ளுதல்
 6. இரத்த தானம் அளிப்போர் பற்றிய விவரங்களை பதிவு செய்தல்
 7. தேவைக்கு மேற்பட்ட கொடையாளர்கள் வந்தால், அவர்களை பதிவு செய்து கொண்டு பிறிதொரு நாளில் அழைத்து இரத்த தானம் செய்யுமாறு         கேட்டுக்கொண்டு, அதனை நடைமுறைபடுத்துதல்
 8. திட்ட அறிக்கையினை அந்த நாளிலே ஆன்லைன் ரிப்போர்டிங் செய்தல்
 9. மேலும் அனைத்து ஊடகங்கள் வாயிலாக திட்டத்தின் செய்தியினை எல்லா மக்களும் அறிய செய்தல்
 10. குருதி கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களை கெளரவித்தல்
 11. திட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புதல்
 12. நீங்கள் இத்திட்டத்தினை செம்மையுற செய்து முடித்து, உங்கள் ரோட்டரி புகழினை மேன்மையுற செய்யுங்கள் என உங்களை வாழ்த்தும்
மாவட்ட சிறப்பு திட்ட குழு - நவரத்னா 2017-18

Rtn. பெ. பாஸ்கரன்,

Rtn. சாந்தா சதீஷ்,

Rtn. குழந்தைராஜ்,

Rtn. இராமநாதன்,

Rtn. மல்லிகா,

Rtn. ஜெயப்பிரகாஷ்,

Rtn. சக்தீஸ்வரன்,

Rtn. பிரபாகரதாஸ்,

Rtn. இராஜசேகரன்.

Rtn ப. கோபாலகிருஷ்ணன்,
மாவட்ட ஆளுநர் 2017-18

தொடர்பிற்கு :
94426 29985 / 98421 44277

 • Camps has to be conducted in different areas.
 • Clubs can seperately or togetherly conduct Camps.
 • Document the details of the blood donors.
 • Submit the report to the district immediately.
Nature Preservation - August
Completed

இயற்கை வனம் (Nature Preservation)

Date : சனிக்கிழமை (Saturday), 12th August 2017

 • ஒவ்வொரு ரோட்டரி சங்க உறுப்பினரும் ஒவ்வொரு மரக்கன்று நட்டு, ஆண்டு முழுவதும் பராமரித்து அதனை மரமாக வளர்த்தல்
 • ஒரே நாளில் 5500 மரக்கன்றுகள் என்ற புதியதொரு சாதனை படைத்தல்.
 • தேவையான மரக்கன்றுகள் மாவட்ட வனத்துறை ​அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
 • முன்கூட்டியே தெரிவித்தால் நாங்கள் மரக்கன்றுகள் கிடைத்திட உதவுவோம்
 • Tree sapling plantation.
 • Each one plant one in the newly developed community area
 • approximatly 5500 members in a single day.
Awareness March along with New Generations - September
Completed

விழிப்புணர்வு பேரணி (Awareness March along with New Generations)

Date : சனிக்கிழமை (Saturday), 09th September 2017

புகையிலை ஒழிப்ப, போதை பொருள் மறுப்பு, ரத்ததானம், கண்தானம், புற்று நோய் தெளிவு ஆகியவற்றினை கருப்பொருளாக கொண்டு ரோட்ராக்ட் ,இன்டராக்ட் மற்றும் ரோட்டரி கிராம குழுமியங்கள் இவற்றினின் துணையோடு விழிப்புணர்வு பேரணி நடத்தி பொது மக்கள் கவனத்தினை ஈர்த்தல்

No to Drugs. Go Green. Go Red. Go Blue . Go Pink.

Value your Spouse - October
Completed

நீயின்றி நான் இல்லை (Value your Spouse)

Date : சனிக்கிழமை (Saturday), 14th October 2017

உங்களது ரோட்டரி சேவைகளுக்கு பின்புலமாய் விளங்கும் உங்களது இல்லத்து அரசிகளை அழைத்து பாராட்டி கௌரவித்தல்

சிறந்த பெண் பேச்சாளர்/சாதனையாளர் ஒருவரினை முக்கிய விருந்தினராய் கொண்டு நிகழ்ச்சி நடத்தல் நலம்

Honouring all spouses in your club meeting with special female speaker as Guest.

அகர முதல (Agara Mudala) - November
Completed

பள்ளிக்கூடம் - அகர முதல (Agara Mudala)

Date : சனிக்கிழமை (Saturday), 11th November 2017

உங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு / அரசு மான்யம் பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவர்களது இன்றியமையாத உடனடி தேவைகள் அறிந்து அவற்றினை உங்களது சங்கத்தின் மூலமாய், பொதுமக்கள் உதவியுடன் / ரோட்டரி மாவட்டத்தின் துணை கொண்டு நிறைவேற்றுதல்.

Carry out the needy things for the needy Government / Government Aided Schools.

Rotary Foundation - December
Completed

கொடை (Rotary Foundation)

Date : சனிக்கிழமை (Saturday), 09th December 2017

நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்களும் தலா USD($).5 வீதம் ரோட்டரி அறக்கட்டளைக்கு ஒரே நாளில் அளித்தல்.

இதன் மூலம் ஓரே நாளில் நமது மாவட்டத்தின் கணக்கில் USD($).27000 வரவு வைக்க பெற்று - அனைவரும் கொடுத்த புதிய சாதனை நிகழ்த்தப்படும் .

Each Rotarian contributes US$5 each in all clubs in a single day 25000 US$ in our district.

Arockya Camps - February
Completed

நலம் (Arockya Camps)

Date : சனிக்கிழமை (Saturday), 10th February 2018

 • உங்களது நகரில் இருதயம் / கிட்னி /மார்பக புற்று / அதிக சர்க்கரை சத்து போன்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
 • சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்கும், மாணவமாணவியர்களுக்கும், மகளிருக்கும் நடத்துதல் நலம்.
 • மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்திட நமது ரோட்டரி மாவட்டத்தின் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

Arockya Camps for common people to be conducted for heart diseases / Diabetes / Kidney / Breast Cancer.

Talents to be Appreciated - March
Completed

திறமை (Talents to be Appreciated)

Date : சனிக்கிழமை (Saturday), 10th March 2018

உங்களது நகரில் உள்ள இதுவரை மக்களிடம் அதிகம் அறிமுகமாகாத திறமை படைத்த நபர்களை தேர்தெடுத்து அவர்களது தனி திறமைகளை மக்களிடையே வெளிப்படுத்தி அவர்களது சாதனைகளை கௌரவித்து பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்குதல்.

Find a person who possess extraordinary skills which has to be brought to the notice of the society around us & felicitate.

Need of food for the Starved - April
Completed

பசிப்பிணி (Need of food for the Starved)

Date : சனிக்கிழமை (Saturday), 07th April 2018

உங்களது சங்கத்தின் சார்பாய் ஒரு பொது இடத்தில (ரோட்டரி உறுப்பினர் ஒருவரின் உணவகம் / இல்லம் அருகில் அமைத்தல் நலம் பயக்கும்) குளிர்பதனப்பெட்டி ஒன்றினை நிறுவி, அதனுள் மீதமான நல்ல உணவு பொருட்களை யாரிடம் இருந்தும் பெற்று, பசிப்பிணியால் வாடும் அனைவரும் பயன் அடைத்திடும் வகையில் பராமரித்தல்.

திட்டத்திற்கு தேவையான குளிர்பதனப்பெட்டி நமது மாவட்ட ஆளுநரின் சார்பாய் அளித்திட எண்ணியுள்ளோம். முன்பதிவு அவசியம்.

A refrigerator is kept in a common place to keep excess food from anyone, to be served to under privileged who are in need.

Arul from Athiya - May
Completed

சூரிய சக்தி (Arul from Athithya)

Date : சனிக்கிழமை (Saturday), 12th May 2018

உங்களது ஊரில் இதுவரை மின்வசதி செய்யப்படாத குடியிருப்பு / பொது இடம் / கல்விக்கூடம் இவற்றில் ஏதாவது ஒன்றில் சூரிய சக்தியால் இயங்கும் ஒரு விளக்கு கம்பம், பல்பு செட் மற்றும் சோலார் பேனல் அமைத்து ஒளியூட்டுதல்.

திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ 10,000 மட்டுமே. (சலுகை விலையில் பொருட்களை பெற்றிட மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும்.)

Provide one solar powered lamp at no electricity area / school / Community block.

 • Governor’s Special citation award to all clubs which will complete all this nine special projects.
 • Best five clubs will be given awards bt District 3000 Special Projects Team.
 • One overall Winner.
 • Four Runners up in 25 / 37 / 63 above 63 membership club categories.
 • Rtn. PP. P. Baskaran,
  Director - Special Projects,
  RC of Trichirapalli Fort,
  94426 29985
 • Rtn. Santha Sathis,
  Joint Director - Special Projects,
  RC of Kodaikanal,
  98421 44277